Surah Al-Mutaffifin - Tamil Translation by Abdulhameed Baqavi
وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ
அளவில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான்
Surah Al-Mutaffifin, Verse 1
ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ
அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர்
Surah Al-Mutaffifin, Verse 2
وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ
மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர்
Surah Al-Mutaffifin, Verse 3
أَلَا يَظُنُّ أُوْلَـٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ
மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா
Surah Al-Mutaffifin, Verse 4
لِيَوۡمٍ عَظِيمٖ
மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா
Surah Al-Mutaffifin, Verse 5
يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
அந்நாளில், மனிதர்கள் அனைவருமே உலகத்தாரின் இறைவன் முன் (விசாரணைக்காக) நின்று கொண்டிருப்பார்கள்
Surah Al-Mutaffifin, Verse 6
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ
நிச்சயமாக பாவிகளின் பதிவேடு (நரகத்தின்) சிறைக்கூடத்தில் இருக்கும்
Surah Al-Mutaffifin, Verse 7
وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ
(நபியே!) அச்சிறைக்கூடத்தின் பதிவேட்டை நீர் அறிவீரா
Surah Al-Mutaffifin, Verse 8
كِتَٰبٞ مَّرۡقُومٞ
அது ஒரு பதிவுப்புத்தகம் (தண்டிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் எல்லாம்) அதில் பதியப்பட்டிருக்கும்
Surah Al-Mutaffifin, Verse 9
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
(இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்
Surah Al-Mutaffifin, Verse 10
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ
அவர்கள் (இதை மட்டுமா பொய்யாக்குகின்றனர்?) கூலி கொடுக்கும் நாளையும் பொய்யாக்குகின்றனர்
Surah Al-Mutaffifin, Verse 11
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ
வரம்புமீறிய பாவியைத் தவிர (மற்றெவரும்) அதைப் பொய்யாக்க மாட்டான்
Surah Al-Mutaffifin, Verse 12
إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
அவனுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகள் தான் என்று கூறுகிறான்
Surah Al-Mutaffifin, Verse 13
كَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ
நிச்சயமாக அவ்வாறல்ல. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களே அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப்படிந்து) மூடிக் கொண்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்)
Surah Al-Mutaffifin, Verse 14
كَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذٖ لَّمَحۡجُوبُونَ
அவ்வாறல்ல. (விசாரணைக்காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில் நிச்சயமாக இவர்கள் தங்கள் இறைவனை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்
Surah Al-Mutaffifin, Verse 15
ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ
பின்னர், நிச்சயமாக இவர்கள் நரகத்தில் நுழைவார்கள்
Surah Al-Mutaffifin, Verse 16
ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
பின்னர், (இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தது இதுதான்'' என்று கூறப்படும்
Surah Al-Mutaffifin, Verse 17
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ
அவ்வாறல்ல! நிச்சயமாக நன்மை செய்தவர்களின் பதிவேடு ‘‘இல்லிய்யூன்' என்ற (மேலான) இடத்தில் இருக்கும்
Surah Al-Mutaffifin, Verse 18
وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ
(நபியே!) ‘இல்லிய்யூன்' என்னும் (மேலான) இடத்தில் இருக்கும் பதிவேடு என்னவென்று நீர் அறிவீரா
Surah Al-Mutaffifin, Verse 19
كِتَٰبٞ مَّرۡقُومٞ
அது ஒரு பதிவுப் புத்தகம். அதில் (நல்லவர்களின் பெயர்களெல்லாம்) பதியப்பட்டிருக்கும்
Surah Al-Mutaffifin, Verse 20
يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ
‘முகர்ரப்' (இறைநெருக்கத்திற்குரிய) வானவர்கள் அதை(க் காத்து)ப் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்
Surah Al-Mutaffifin, Verse 21
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ
ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள் (அந்நாளில்) இன்பம் நிறைந்த சொர்க்கத்தில்
Surah Al-Mutaffifin, Verse 22
عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ
உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்த வண்ணம் சொர்க்கத்தின் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்
Surah Al-Mutaffifin, Verse 23
تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ
அவர்கள் முகங்களில் அவர்களின் சுகவாசத்தின் செழிப்பை (நபியே!) நீர் அறிந்து கொள்வீர்
Surah Al-Mutaffifin, Verse 24
يُسۡقَوۡنَ مِن رَّحِيقٖ مَّخۡتُومٍ
முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற திராட்சை ரசம் அவர்களுக்குப் புகட்டப்படும்
Surah Al-Mutaffifin, Verse 25
خِتَٰمُهُۥ مِسۡكٞۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ
அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். (பானத்தை) ஆசை கொள்ள விரும்புவோர் அதையே ஆசை கொள்ளவும்
Surah Al-Mutaffifin, Verse 26
وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ
அதில் ‘தஸ்னீம்' என்ற (வடிகட்டிய) பானமும் கலந்திருக்கும்
Surah Al-Mutaffifin, Verse 27
عَيۡنٗا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ
(தஸ்னீம் என்பது அல்லாஹ்வுக்குச்) சமீபமானவர்கள் அருந்துவதற்கென ஏற்பட்ட ஒரு (சிறப்பான) சுனையின் நீராகும்
Surah Al-Mutaffifin, Verse 28
إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ
நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கை கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர்
Surah Al-Mutaffifin, Verse 29
وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ
அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக்கொள்கின்றனர்
Surah Al-Mutaffifin, Verse 30
وَإِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ
(அவர்களை விட்டும் விலகித்) தங்கள் குடும்பத்தார்களிடம் சென்று விட்டபோதிலும், இவர்களுடைய விஷயங்களையே (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர்
Surah Al-Mutaffifin, Verse 31
وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوٓاْ إِنَّ هَـٰٓؤُلَآءِ لَضَآلُّونَ
(வழியில்) இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) ‘‘நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள்'' என்றும் கூறுகின்றனர்
Surah Al-Mutaffifin, Verse 32
وَمَآ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَٰفِظِينَ
(நம்பிக்கையாளர்களைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே
Surah Al-Mutaffifin, Verse 33
فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ
எனினும், (மறுமை நாளாகிய) இன்றைய தினம் நம்பிக்கை கொண்டவர்கள் அந்நிராகரிப்பவர்களைக் கண்டு சிரிக்கின்றனர்
Surah Al-Mutaffifin, Verse 34
عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ
(சொர்க்கத்திலுள்ள சிறந்த) இருக்கைகள் மீது (சாய்ந்த வண்ணம்) இருந்து கொண்டு, இந்தப் பாவிகள் படும் வேதனையைப்) பார்த்துக்கொண்டு
Surah Al-Mutaffifin, Verse 35
هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ
(மறுமையை) நிராகரித்த இவர்களுக்கு, இவர்களுடைய செயலுக்குத்தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்பார்கள்)
Surah Al-Mutaffifin, Verse 36