Surah Al-Ghashiya - Tamil Translation by Abdulhameed Baqavi
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ
(நபியே! அனைவரையும்) சூழ்ந்து கொள்ளக்கூடிய (மறுமையைப் பற்றிய) செய்தி உமக்குக் கிடைத்ததா
Surah Al-Ghashiya, Verse 1
وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ
அந்நாளில், சில முகங்கள் இழிவடைந்து இருக்கும்
Surah Al-Ghashiya, Verse 2
عَامِلَةٞ نَّاصِبَةٞ
அவை (தவறான வழியில்) அமல் செய்து (அதிலேயே) நிலைத்திருந்தவை
Surah Al-Ghashiya, Verse 3
تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கே அவை செல்லும்
Surah Al-Ghashiya, Verse 4
تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ
(அவை) கொதிக்கின்ற ஓர் ஊற்றிலிருந்து நீர் புகட்டப்படும்
Surah Al-Ghashiya, Verse 5
لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ
அதில் அவர்களுக்கு(க் கருவேல) முட்களைத் தவிர, வேறொன்றும் உணவாகக் கிடைக்காது
Surah Al-Ghashiya, Verse 6
لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ
(அது அவர்களுடைய உடலைக்) கொழுக்கவும் வைக்காது; (அவர்களுடைய) பசியையும் தீர்த்து வைக்காது
Surah Al-Ghashiya, Verse 7
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ
எனினும், அந்நாளில் வேறு சில முகங்களோ, மிக்க செழிப்பாக இருக்கும்
Surah Al-Ghashiya, Verse 8
لِّسَعۡيِهَا رَاضِيَةٞ
(இம்மையில்) தாங்கள் செய்த (நல்ல) காரியங்களைப் பற்றித் திருப்தியடையும்
Surah Al-Ghashiya, Verse 9
فِي جَنَّةٍ عَالِيَةٖ
(அவை) மேலான சொர்க்கத்தில் இருக்கும்
Surah Al-Ghashiya, Verse 10
لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ
அதில் வீண் வார்த்தையை அவை செவியுறாது
Surah Al-Ghashiya, Verse 11
فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ
அதில் (இவர்கள் அருந்துவதற்கு) தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்ற (தெளிவான) ஒரு சுனையுண்டு
Surah Al-Ghashiya, Verse 12
فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ
அதில் (இவர்கள் அமருவதற்கு) உயர்ந்த இருக்கைகளுண்டு
Surah Al-Ghashiya, Verse 13
وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ
(பல வகை இன்பமான பானங்கள் நிறைந்த) கெண்டிகள் (இவர்கள் முன்) வைக்கப்பட்டிருக்கும்
Surah Al-Ghashiya, Verse 14
وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ
(இவர்கள் சாய்ந்து கொள்வதற்காகத்) திண்டு தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்
Surah Al-Ghashiya, Verse 15
وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ
உயர்ந்த விரிப்புகள் இவர்களின் கீழ் விரிக்கப்பட்டிருக்கும். (இத்தகைய சுகபோகத்தில் நல்லடியார்கள் இருப்பார்கள்)
Surah Al-Ghashiya, Verse 16
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ
(நபியே! இந்நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது
Surah Al-Ghashiya, Verse 17
وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ
(அவர்களுக்கு மேல் உள்ள) வானத்தையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது
Surah Al-Ghashiya, Verse 18
وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ
(அவர்கள் கண்முன் தோன்றும்) மலைகளையும் அவர்கள் (கவனிக்க வேண்டாமா?) அவை எவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன
Surah Al-Ghashiya, Verse 19
وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ
(அவர்கள் வசிக்கும்) பூமியையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது
Surah Al-Ghashiya, Verse 20
فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ
(ஆகவே, நபியே!) இவற்றை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து, இவற்றைப் படைத்தவனின் அருள்களை, அவர்களுக்கு நீர் கூறி) நல்லுபதேசம் செய்வீராக! (இவற்றைக்கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறாவிடில் அதற்காக நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) நீர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தான்
Surah Al-Ghashiya, Verse 21
لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ
(அவ்வாறே நடக்கும்படி) அவர்களை நீர் நிர்ப்பந்திக்கக்கூடியவர் அல்ல
Surah Al-Ghashiya, Verse 22
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
எனினும், எவர்கள் புறக்கணித்து நிராகரிக்கிறார்களோ
Surah Al-Ghashiya, Verse 23
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ
அவர்களை அல்லாஹ் பெரும் வேதனை செய்வான்
Surah Al-Ghashiya, Verse 24
إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ
நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம்தான் வர வேண்டும்
Surah Al-Ghashiya, Verse 25
ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم
நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்குக் கேட்பதும் நம் மீதுதான் கடமையாகும்
Surah Al-Ghashiya, Verse 26