Surah Abasa - Tamil Translation by Abdulhameed Baqavi
عَبَسَ وَتَوَلَّىٰٓ
(நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக)
Surah Abasa, Verse 1
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக
Surah Abasa, Verse 2
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
(நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா
Surah Abasa, Verse 3
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்)
Surah Abasa, Verse 4
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
(நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ
Surah Abasa, Verse 5
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்
Surah Abasa, Verse 6
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)
Surah Abasa, Verse 7
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ
Surah Abasa, Verse 8
وَهُوَ يَخۡشَىٰ
அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்
Surah Abasa, Verse 9
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்
Surah Abasa, Verse 10
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்
Surah Abasa, Verse 11
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்
Surah Abasa, Verse 12
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது)
Surah Abasa, Verse 13
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; (அது) மிகப் பரிசுத்தமானது
Surah Abasa, Verse 14
بِأَيۡدِي سَفَرَةٖ
எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது)
Surah Abasa, Verse 15
كِرَامِۭ بَرَرَةٖ
(அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்
Surah Abasa, Verse 16
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
(பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்
Surah Abasa, Verse 17
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)
Surah Abasa, Verse 18
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்
Surah Abasa, Verse 19
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்
Surah Abasa, Verse 20
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான்
Surah Abasa, Verse 21
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான்
Surah Abasa, Verse 22
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
எனினும், நிச்சயமாக மனிதன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை
Surah Abasa, Verse 23
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
மனிதன் தன் உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்
Surah Abasa, Verse 24
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்தோம்
Surah Abasa, Verse 25
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
பின்னர், பூமியையும் பிளந்(து வெடிக்கச் செய்)தோம்
Surah Abasa, Verse 26
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கிறோம்
Surah Abasa, Verse 27
وَعِنَبٗا وَقَضۡبٗا
(இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்
Surah Abasa, Verse 28
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்
Surah Abasa, Verse 29
وَحَدَآئِقَ غُلۡبٗا
கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்
Surah Abasa, Verse 30
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்
Surah Abasa, Verse 31
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு (முளைக்க வைக்கிறோம்)
Surah Abasa, Verse 32
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
(உலக முடிவின்பொழுது செவிகளை) செவிடாக்கும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்
Surah Abasa, Verse 33
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்
Surah Abasa, Verse 34
وَأُمِّهِۦ وَأَبِيهِ
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்
Surah Abasa, Verse 35
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்)
Surah Abasa, Verse 36
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்
Surah Abasa, Verse 37
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும்
Surah Abasa, Verse 38
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
சந்தோஷத்தால் சிரித்தவையாகவும் இருக்கும்
Surah Abasa, Verse 39
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்
Surah Abasa, Verse 40
تَرۡهَقُهَا قَتَرَةٌ
கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்)
Surah Abasa, Verse 41
أُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்
Surah Abasa, Verse 42